- கடவுள் ஒருவரே; அவர் ஒளிவடிவினர். அவரை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்க.
- சிறு தெய்வ வழிபாடு கூடாது; உயிர்ப்பலியிடுதலும் விலக்குக.
- சாதி, சமய, மத, இன, மொழி, நாடு பாகுபாடுகள் அனுசரித்தல் வேண்டாம்.
- எல்லா உயிர்களையும் தன்னுயிர்போல் எண்ணும் ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமையைக் கைக்கொள்க.
- துன்புறும் உயிர்களுக்கு உதவுவதே இறைவழிபாடு.
- உயிர் இரக்கம் ஒன்றே இறைவனின் பேரருளைப் பெற வழிகோலும்.
- பசித்தோரின் பசியாற்றுதல் என்னும் ஜீவகாருண்யமே பேரின்ப வீட்டின் திறவுகோல்.
- புலால் உண்ணுதல் வேண்டாம். ஏனெனில், எல்லா உயிர்களிலும் கடவுள் விளங்குகிறார்.
- வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் ஆகியவற்றில் இலட்சியம் வைக்க வேண்டாம்.
- கண்மூடிப் பழக்கவழக்கங்களைக் கைவிடவேண்டும்.காது, மூக்கு குத்துதல் வேண்டாம்.
- ஆண்களைப் போலவே பெண்களுக்கும் யோகம் முதலிய சாதனங்கள் கற்பிக்க வேண்டும். பேதமற்று, படிப்பு முதலியவையும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
- கணவன் இறந்தால் மனைவியிடம் தாலி வாங்குதல் கூடாது.
மனைவி இறந்தால் கணவன் மறுமணம் செய்யற்க. - இறந்தவர்களைப் புதைக்கவேண்டும்; எரிக்கக்கூடாது.
- கருமாதி, திதி முதலிய சடங்குகள் செய்யாதீர்; மாறாக, உயிர்நீத்தவர் நினைவில் அன்னதானம் செய்தல் வேண்டும்.
- மக்கள் எல்லோர்க்கும் பொதுவான வழிபாடு ஜோதிவழிபாடே!
- உண்மை அன்பால் கடவுள் வழிபாடு செய்து கடவுள் ஒளியை நமக்குள் காண்க.
- பசித்திரு, தனித்திரு, விழித்திரு.
- இந்திரிய, கரண, ஜீவ, ஆன்ம, நித்திய ஜீவகாருண்ய ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க.
- ஜீவகாருண்ய ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க ஏமசித்தி, சாகாக்கல்வி, தத்துவ நிக்கிரகம் செய்தல், கடவுள்நிலை அறிந்து அம்மயம் ஆதல் ஆகிய நான்கு பேறுகள் கிடைத்து, மரணமிலாப் பெருவாழ்வு பெறுதல் கூடும்.
- எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டுதல் வேண்டும்.
எதிலும் பொதுநோக்கம் வேண்டும்.
Showing posts with label vadaloor. Show all posts
Showing posts with label vadaloor. Show all posts
Thursday, July 10, 2008
சன்மார்க்க சங்கத்தின் முக்கிய கொள்கைகள் கடவுள்
Labels:
arutpermjothy,
Bhagwan Rajneesh,
dr.kadeer ibraheem,
guru,
Osho,
sanmarkam,
vadaloor,
vallalar
Subscribe to:
Posts (Atom)